என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அமெரிக்கா வடகொரியா
நீங்கள் தேடியது "அமெரிக்கா வடகொரியா"
வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பால் உலகில் அமைதி ஏற்பட பிரார்த்திப்பதாக போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். #PopeFrancis #kimjongun #trump
வாட்டிகன் சிட்டி:
அரை நூற்றாண்டுக்கும் மேலான பகைநாடுகளாக விளங்கி வரும் அமெரிக்கா - வடகொரியா நாடுகளுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்தும் வகையிலும், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் சிங்கப்பூரில் வரும் 12-ம் தேதி இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுகின்றனர்.
இந்நிலையில், இந்த சந்திப்பால் உலகில் அமைதி ஏற்பட பிரார்த்திப்பதாக போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலி நாட்டில் உள்ள வாட்டிகன் தேவாலயத்தில் இன்று நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், ‘எதிர்வரும் நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் மூலம் கொரிய தீபகற்பத்தில் வாழும் மக்களுக்கும், இந்த ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பாதையை உருவாக்கி, அமைதியான எதிர்காலத்துக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்னும் எனது சிறப்பான நட்புறவின் எண்ணத்தையும், பிரார்த்தனைகளையும் கொரிய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். #PopeFrancis #kimjongun #trump
×

X